திங்கள், 29 டிசம்பர், 2008

உருளைக் கிழங்கில் ஒரு பாடம்.

ஒரு ஆசிரியை தன் மாணவர்களைப் பார்த்து ஒரு விளையாட்டுக்கு அழைத்தார். “மாணவர்களே! தேவையான அளவு சிறு சிறு உருளைக் கிழங்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உருளைக் கிழங்கின் மேலும் நீங்கள் வெறுக்கும் ஒருவரின் பெயரை எழுதி வையுங்கள். அதை ஒரு பையில் போட்டு உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். நான் சொல்லும் வரை தூரப் போடக்கூடாது'' என்றார்.

சிறுவர்களுக்கும் இவ்விளையாட்டு ஜாலியாக இருந்தது. அவரவர் வெறுக்கும் மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உருளைக்கிழங்குகளை எடுத்துக் கொண்டார்கள். பெயர்களை எழுதி தங்கள் பைக்குள் போட்டுக் கொண்டார்கள்.
ஒரு நாள் இரு நாள் என சில நாள் போனது. ஆசிரியை. உருளைக் கிழங்குகளை வெளியில் எடுக்கச் சொல்லவே இல்லை. நான்கைந்து நாட்கள் கழிந்ததும் கிழங்கு அழுகி நாற்றமடிக்கத் துவங்கியது. மாணவர்களால் அவற்றை பையில் வைத்துக்கொள்ள இயலவில்லை. ஆசிரியையிடம் சொன்னார்கள்.

“மாணவர்களே! விளையாட்டு மாதிரி ஆரம்பி த்தாலும் இது எல்லோருக்கும் பாடம். பையில் இருக்கிற உருளைக்கிழங்கு மாதிரிதான் மனதிலிருக்கும் வெறுப்பும். அது மனதையே கெடுத்து விடும். உருளைக் கிழங்கை நான்கைந்து நாட்கள் வைத்திருக்கவே கஷ்டப்படுகிறீர்களே. மனசுக்குள்ள எப்போதும் ஒருவர் மேல் வெறுப்பு இருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள். உருளைக் கிழங்கோடு மற்றவர்களின் மேலிருந்த வெறுப்பையும் தூக்கி எறியுங்கள்'' என்றார் ஆசிரியை.

4 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

அருமையான கருத்து!

மிகவும் நன்று!

Unknown சொன்னது…

நல்ல நீதி போதனைதான். இருந்தாலும் இப்ப இருக்கிற பசங்க இதையெல்லாம் கேட்டுட்டு சும்மா போயிடுவாங்கன்னா நினைக்கிறீங்க. யப்பா.

படகு சொன்னது…

தங்களின் வருகைக்கு மிகுந்த நன்றி நாமக்கல் சிபி
\\அருமையான கருத்து\\

படகு சொன்னது…

\\பசங்க இதையெல்லாம் கேட்டுட்டு சும்மா போயிடுவாங்கன்னா நினைக்கிறீங்க\\
நம்ம பசங்க ரொம்ப நல்ல பசங்க....
நம்புங்க சுல்தான் பாய்.