செவ்வாய், 20 ஜனவரி, 2009

இதயம் இளமையாக 7 டிப்ஸ்



உங்கள் இதயத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க டாக்டர்கள் தரும் 7 டிப்ஸ்
1. தினந்தோறும் உடற்பயிற்சி என்பதை வழக்கமாக்குங்கள். ரொம்பக் கடினமான பயிற்சிகள் எல்லாம் வேண்டாம். 30லிருந்து 45 நிமிடங்கள் வரை நடை பயிற்சி (வாக்கிங்) செய்யுங்கள். அது போதும்.
2. உங்கள் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். அளவான எடை உள்ளவர்களுக்கு இதய நோய்கள் குறைவாகவே வருகிறது.
3. உணவுக் கட்டுப்பாடு அவசியம். கொழுப்புச் சத்துக் குறைந்த உணவுகளையே உண்ணுங்கள். உப்பைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள்.
4. கார்போஹைட்ரேட் கலோரியைக் கணக்கெடுங்கள். சர்க்கரை நோய் வராத அளவுக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். டயபடீஸ்காரர்களை இதய நோய்க்கு மிகவும் பிடிக்கும்.
5. ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்யுங்கள். 120/80 இருந்தால் சந்தோஷப்படுங்கள்.
6. இன்று முதல் சிகரெட்டை விட்டு விடுவதாக சத்தியம் செய்யுங்கள். அதிகமாக மது அருந்துபவர்களின் இதயம் சீக்கிரம் ரிப்பேராகி விடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
7. மிகவும் முக்கியக் காரணம் உங்கள் முன்னோர்களுக்கு இதய நோய் இருந்தால் உங்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். உங்கள் அப்பா, அம்மா, சகோதரர் யாருக்காவது இதய நோய் இருந்தாலும் நீங்களும் ஒழுங்காக அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இதய நோய்கள் இல்லாத அப்பா அம்மாவாக மாறுங்கள்.


மிகச்சுலபமான வழிமுறைகள்தான். சரியாக பின்பற்றினால் பெரிய ஆபத்தை தவிர்க்கலாம். அனைவரும் முயற்சி செய்வோம்.