திங்கள், 29 டிசம்பர், 2008

இப்பத்தான்டா சொன்னேன் வெண்ணெ

அண்மையில் என்னிடம் வந்த ரூபாய்த் தாளின் முன் பக்கமுள்ள வெள்ளைப் பகுதியில் ''திருப்பிப் பார்க்காதே'' என்ற வாசகத்தை யாரோ எழுதியிருப்பதைக் கண்டேன். அப்படி என்னதான் பின் பக்கம் இருக்கிறது என்ற ஆவலில் திருப்பிப் பார்த்தேன் ''இப்பத்தான்டா சொன்னேன் வெண்ணெ''' என்று எழுதப்பட்டிருந்தது கண்டு நொந்து போனேன்

உருளைக் கிழங்கில் ஒரு பாடம்.

ஒரு ஆசிரியை தன் மாணவர்களைப் பார்த்து ஒரு விளையாட்டுக்கு அழைத்தார். “மாணவர்களே! தேவையான அளவு சிறு சிறு உருளைக் கிழங்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உருளைக் கிழங்கின் மேலும் நீங்கள் வெறுக்கும் ஒருவரின் பெயரை எழுதி வையுங்கள். அதை ஒரு பையில் போட்டு உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். நான் சொல்லும் வரை தூரப் போடக்கூடாது'' என்றார்.

சிறுவர்களுக்கும் இவ்விளையாட்டு ஜாலியாக இருந்தது. அவரவர் வெறுக்கும் மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உருளைக்கிழங்குகளை எடுத்துக் கொண்டார்கள். பெயர்களை எழுதி தங்கள் பைக்குள் போட்டுக் கொண்டார்கள்.
ஒரு நாள் இரு நாள் என சில நாள் போனது. ஆசிரியை. உருளைக் கிழங்குகளை வெளியில் எடுக்கச் சொல்லவே இல்லை. நான்கைந்து நாட்கள் கழிந்ததும் கிழங்கு அழுகி நாற்றமடிக்கத் துவங்கியது. மாணவர்களால் அவற்றை பையில் வைத்துக்கொள்ள இயலவில்லை. ஆசிரியையிடம் சொன்னார்கள்.

“மாணவர்களே! விளையாட்டு மாதிரி ஆரம்பி த்தாலும் இது எல்லோருக்கும் பாடம். பையில் இருக்கிற உருளைக்கிழங்கு மாதிரிதான் மனதிலிருக்கும் வெறுப்பும். அது மனதையே கெடுத்து விடும். உருளைக் கிழங்கை நான்கைந்து நாட்கள் வைத்திருக்கவே கஷ்டப்படுகிறீர்களே. மனசுக்குள்ள எப்போதும் ஒருவர் மேல் வெறுப்பு இருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள். உருளைக் கிழங்கோடு மற்றவர்களின் மேலிருந்த வெறுப்பையும் தூக்கி எறியுங்கள்'' என்றார் ஆசிரியை.

புதன், 26 நவம்பர், 2008

எல்லாமிருந்தும்

ஒரே மகள் ரொம்பச் செல்லம்
கண்மணி என்பார் தந்தை
அருமை மகளென்னை செல்லமே
என்றழைத்த வாய் மாறாத தாய்
கோபமிருந்தாலும் அன்பே என்றே
அன்பாய் அழைப்பார் கணவர்
பாப்பா என்ற பாசத்தில் குறை வைப்பதில்லை தமையன்
மாமி என்பாள் மரியாதையாய் குட்டச்சி, என் அண்ணன் மகள்
மச்சி மகளுக்கு நான் சாச்சி
ஆயிரம் பேர் அழைத்த போதும்
எல்லாமிருந்தும் எதுவும் அற்ற வெறுமையாய்
அம்மா என்றழைக்கும் மகவுக்கு
வரம் கேட்டு தவமிருக்கும் நான்