சனி, 31 ஜனவரி, 2009

நீங்களும் இப்படி யோசிப்பீங்களா?




இப்படி யோசித்திருக்கிறீர்களா?
1. வெயிலில் அதிகம் காய்ந்தால் முடி வெளுக்கிறது ஆனால் ஏன் உடல் தோல் கருக்கிறது?
2. பெண்கள் கண்ணுக்கு மையிடும்போது ஏன் வாயைத் திறந்து வைத்துக் கொள்கிறார்கள்?
3. Abbreviation ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையாய் இருக்கிறது?
4. டாக்டர்கள் தாங்கள் செய்வதை ஏன் practice என்று சொல்கிறார்கள்?
5. உங்கள் பணம் முழுவதையும் முதலீடு செய்பவர்களுக்கு ஏன் broker என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?
6. கணிணியில் windowsஐ மூடுவதற்கு ஏன் Start பட்டனை அழுத்த வேண்டியிருக்கிறது?
7. ஏன் எலுமிச்சை ஜூஸை செயற்கை flavourல் செய்து விட்டு, பாத்திரங்கள் கழுவும் liquidல் உண்மை எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகிறார்கள்?
8. ஏன் வண்டிகள் மிக மெதுவாக பயணிக்கும் நேரத்தை rush hour என்று சொல்கிறார்கள்?
9. 'சுவை கூட்டப்பெற்ற புதிய வகை' என்று நாய் உணவில் எழுதியுள்ளார்களே, யார் சுவை பார்த்தார்கள்?
10. விமானத்தில் ஏன் அழிக்க முடியாத வகையில் கருப்புப் பெட்டியை மட்டும் செய்கிறார்கள்? முழு விமானத்தையும் செய்தாலென்ன?
11. Con என்ற வார்த்தை Pro என்ற வார்த்தைக்கு எதிரானதென்றால் Progressக்கு Congress எதிரானதா?
12. ஒட்டி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஏன் Apartments என்கிறார்கள்?
13. விமானத்தில் பறப்பது பாதுகாப்பானதென்றால் விமான நிலையத்தை ஏன் terminal என்கின்றார்கள்.?