சனி, 31 ஜனவரி, 2009

நீங்களும் இப்படி யோசிப்பீங்களா?




இப்படி யோசித்திருக்கிறீர்களா?
1. வெயிலில் அதிகம் காய்ந்தால் முடி வெளுக்கிறது ஆனால் ஏன் உடல் தோல் கருக்கிறது?
2. பெண்கள் கண்ணுக்கு மையிடும்போது ஏன் வாயைத் திறந்து வைத்துக் கொள்கிறார்கள்?
3. Abbreviation ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையாய் இருக்கிறது?
4. டாக்டர்கள் தாங்கள் செய்வதை ஏன் practice என்று சொல்கிறார்கள்?
5. உங்கள் பணம் முழுவதையும் முதலீடு செய்பவர்களுக்கு ஏன் broker என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?
6. கணிணியில் windowsஐ மூடுவதற்கு ஏன் Start பட்டனை அழுத்த வேண்டியிருக்கிறது?
7. ஏன் எலுமிச்சை ஜூஸை செயற்கை flavourல் செய்து விட்டு, பாத்திரங்கள் கழுவும் liquidல் உண்மை எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகிறார்கள்?
8. ஏன் வண்டிகள் மிக மெதுவாக பயணிக்கும் நேரத்தை rush hour என்று சொல்கிறார்கள்?
9. 'சுவை கூட்டப்பெற்ற புதிய வகை' என்று நாய் உணவில் எழுதியுள்ளார்களே, யார் சுவை பார்த்தார்கள்?
10. விமானத்தில் ஏன் அழிக்க முடியாத வகையில் கருப்புப் பெட்டியை மட்டும் செய்கிறார்கள்? முழு விமானத்தையும் செய்தாலென்ன?
11. Con என்ற வார்த்தை Pro என்ற வார்த்தைக்கு எதிரானதென்றால் Progressக்கு Congress எதிரானதா?
12. ஒட்டி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஏன் Apartments என்கிறார்கள்?
13. விமானத்தில் பறப்பது பாதுகாப்பானதென்றால் விமான நிலையத்தை ஏன் terminal என்கின்றார்கள்.?

புதன், 28 ஜனவரி, 2009

இவ்வளவு பெரிதாய் எவ்வளவு அழகு!





என்ன ஒரு அழகு! இது என்ன பாம்பின் கண்ணா?


குதிரையின் கடிவாளம் மாதிரி இருப்பது - தும்பியின் கண்!



ஒலி வாங்கி மாதிரி, பூச்சியின் கண்ணில் என்ன டிசைன்? இந்த டிசைனுக்கு யாராவது patent வாங்கியிருப்பார்களோ?


பனித்துளிக்குள் பூ பூக்குமா?



வீட்டு ஈ தான் காட்டெருமை மாதிரி இருக்கிறது




இது என்ன கண்ணா? லென்ஸே பிதுங்கி வழிகிறதா?


படங்கள் எப்படி இருக்கிறது நண்பர்களே. இறைவன் படைப்பில் இத்தனை அழகா?


செவ்வாய், 20 ஜனவரி, 2009

இதயம் இளமையாக 7 டிப்ஸ்



உங்கள் இதயத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க டாக்டர்கள் தரும் 7 டிப்ஸ்
1. தினந்தோறும் உடற்பயிற்சி என்பதை வழக்கமாக்குங்கள். ரொம்பக் கடினமான பயிற்சிகள் எல்லாம் வேண்டாம். 30லிருந்து 45 நிமிடங்கள் வரை நடை பயிற்சி (வாக்கிங்) செய்யுங்கள். அது போதும்.
2. உங்கள் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். அளவான எடை உள்ளவர்களுக்கு இதய நோய்கள் குறைவாகவே வருகிறது.
3. உணவுக் கட்டுப்பாடு அவசியம். கொழுப்புச் சத்துக் குறைந்த உணவுகளையே உண்ணுங்கள். உப்பைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள்.
4. கார்போஹைட்ரேட் கலோரியைக் கணக்கெடுங்கள். சர்க்கரை நோய் வராத அளவுக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். டயபடீஸ்காரர்களை இதய நோய்க்கு மிகவும் பிடிக்கும்.
5. ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்யுங்கள். 120/80 இருந்தால் சந்தோஷப்படுங்கள்.
6. இன்று முதல் சிகரெட்டை விட்டு விடுவதாக சத்தியம் செய்யுங்கள். அதிகமாக மது அருந்துபவர்களின் இதயம் சீக்கிரம் ரிப்பேராகி விடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
7. மிகவும் முக்கியக் காரணம் உங்கள் முன்னோர்களுக்கு இதய நோய் இருந்தால் உங்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். உங்கள் அப்பா, அம்மா, சகோதரர் யாருக்காவது இதய நோய் இருந்தாலும் நீங்களும் ஒழுங்காக அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இதய நோய்கள் இல்லாத அப்பா அம்மாவாக மாறுங்கள்.


மிகச்சுலபமான வழிமுறைகள்தான். சரியாக பின்பற்றினால் பெரிய ஆபத்தை தவிர்க்கலாம். அனைவரும் முயற்சி செய்வோம்.