வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

ஒரு குப்பை வண்டி நிறைய படிப்பு






விமான நிலையம் போக ஒரு வாடகைக் காரில் போனோம். இங்கு மூவழிச்சாலைகள். மெதுவாக செல்வதற்காக உள்ள வலது புறச்சாலையில் டாக்ஸி சென்று கொண்டிருந்தது. திடீரென ஒரு கருப்பு நிற கார் பார்க்கிங்கிலிருந்து தாவிக் குதித்து வெளிவரவும், எமது காரோட்டி படாரென பிரேக்கை அழுத்த, கார் வழுக்கி, அரை வட்டமடித்துத் திரும்பி அந்த கருத்த காரின் பின்னால் சில அங்குல இடைவெளியில் நின்றது.



கருத்த வண்டியை ஓட்டியவர் தம் காருக்கு வெளியே தலை நீட்டி எம்மை நோக்கி கேவலமாக சைகை செய்ததோடு ஏதேதோ திட்டினார்.
டாக்ஸி டிரைவரோ புன்னகைத்தவாரே அவரை நோக்கி கையசைத்தார். அதாவது வெகு சிநேகத்தோடு...

"என்ன இப்படி இருக்கின்றீர்கள். இன்னும் கொஞ்சமிருந்தால் அவன் உன் காரை நசுக்கி விட்டு நம்மையெல்லாம் மருத்துவமனைக்கு அனுப்பி இருப்பான்" என்று டிரைவரிடம் சொன்னேன்.

அந்த டிரைவர் எனக்குச் சொல்லித் தந்ததுதான் ஒரு குப்பை வண்டி படிப்பு

இங்கே பல மனிதர்கள் குப்பை வண்டி போலத்தான்.
அவர்கள் எண்ணங்களில், நிறைந்த குப்பைகளையும், மனம் முழுக்க ஏமாற்றத்தையும், வெறுப்பையும் கோபத்தையும் சுமந்து திரிகின்றனர். அவைகள் மிகக்கூடுதலாகிப் போனவுடன் அவற்றை அவர்கள் எங்காவது வீசப் பார்க்கின்றனர். சில நேரங்களில் உங்கள் மீது.

அவை தனிப்பட்ட உங்கள் மீது, வீசப்பட்டதாக உணராதீர்கள்.
சும்மா புன்னகைத்து, அவர்களை வாழ்த்தி, விலகுங்கள்
அவர்களின் குப்பைகளை நீங்கள் சுமந்து, பின்னர் அதை உங்கள் வீடுகளிலும், வேலை செயயும் இடங்களிலும், உங்கள் தெருக்களிலும் வீசாதீர்கள்.
சுருக்கமாகச் சொன்னால், வெற்றி பெரும் மனிதர்கள் இந்தக் குப்பை வண்டிகள் அவர்களின் நல்ல நாளைப் பாழாக்க விட மாட்டார்கள்.
ஒவ்வொரு விடியலையும் மனம் வருந்தி எதிர் கொள்ள நமக்கு வாழ்நாள் போதாது நண்பர்களே.

உங்களை நல்ல முறையில் நடத்துபவர்களுடன் அன்பாயிருங்கள். அஃதல்லாத மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

வலையுலகிலும் இதை கடைபிடித்தால், வலையுலகம் எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவமாய் இலங்கும்.

வாழ்க்கையில் நாமாக உருவாக்கிக் கொள்வது வெறும் பத்து சதம்(10%)தான். மிகுதி தொன்னூறு சதம் (90%) வாழ்க்கையை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தது.

இனி உங்களிடம் வரப்போகிற மகிழ்ச்சியான, குப்பைகளற்ற நாளுக்காக என் வாழ்த்துக்கள்.