சனி, 31 ஜனவரி, 2009

நீங்களும் இப்படி யோசிப்பீங்களா?




இப்படி யோசித்திருக்கிறீர்களா?
1. வெயிலில் அதிகம் காய்ந்தால் முடி வெளுக்கிறது ஆனால் ஏன் உடல் தோல் கருக்கிறது?
2. பெண்கள் கண்ணுக்கு மையிடும்போது ஏன் வாயைத் திறந்து வைத்துக் கொள்கிறார்கள்?
3. Abbreviation ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையாய் இருக்கிறது?
4. டாக்டர்கள் தாங்கள் செய்வதை ஏன் practice என்று சொல்கிறார்கள்?
5. உங்கள் பணம் முழுவதையும் முதலீடு செய்பவர்களுக்கு ஏன் broker என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?
6. கணிணியில் windowsஐ மூடுவதற்கு ஏன் Start பட்டனை அழுத்த வேண்டியிருக்கிறது?
7. ஏன் எலுமிச்சை ஜூஸை செயற்கை flavourல் செய்து விட்டு, பாத்திரங்கள் கழுவும் liquidல் உண்மை எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகிறார்கள்?
8. ஏன் வண்டிகள் மிக மெதுவாக பயணிக்கும் நேரத்தை rush hour என்று சொல்கிறார்கள்?
9. 'சுவை கூட்டப்பெற்ற புதிய வகை' என்று நாய் உணவில் எழுதியுள்ளார்களே, யார் சுவை பார்த்தார்கள்?
10. விமானத்தில் ஏன் அழிக்க முடியாத வகையில் கருப்புப் பெட்டியை மட்டும் செய்கிறார்கள்? முழு விமானத்தையும் செய்தாலென்ன?
11. Con என்ற வார்த்தை Pro என்ற வார்த்தைக்கு எதிரானதென்றால் Progressக்கு Congress எதிரானதா?
12. ஒட்டி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஏன் Apartments என்கிறார்கள்?
13. விமானத்தில் பறப்பது பாதுகாப்பானதென்றால் விமான நிலையத்தை ஏன் terminal என்கின்றார்கள்.?

27 கருத்துகள்:

*இயற்கை ராஜி* சொன்னது…

ரூம் போட்டு யோசிச்சீங்க‌ளோ?!!!

யோச‌னையை நிறுத்திக்கோங்க‌ ப்ளீஸ்! இல்லைனா அழுதுடுவேன்

Unknown சொன்னது…

ஐயையோ? என்னாச்சு? ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?
பார்த்துங்க பயமாயிருக்கு! :(

இது வரை அப்படி யோசிக்க வில்லை. ஆனால் இப்ப தோணுதே. அது ஏன்?

அந்த பலகையில் உள்ள படம் நீங்களா போட்டதா? இயற்கையில் அதுவா வந்ததா?

பெயரில்லா சொன்னது…

நல்லாதான் யோகிறீங்க பிரதர்....

கணேஷ் சொன்னது…

உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்!
http://youthful.vikatan.com/youth/index.asp

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு வந்த இந்த சிந்தனை ஏன் எல்லோருக்கும் வரவில்லை?

RAMASUBRAMANIA SHARMA சொன்னது…

Very good thoughts...will try to give answers logically in couple of days....

julie சொன்னது…

நாங்களும் யோசிச்சிருக்கோம் .......பத்தாவது பாயிண்ட் மட்டும் ..........
நல்ல தான் யோசிக்கிறீங்க நீங்க.........பதில் கிடைச்சா கொஞ்சம் சொல்லுங்க ...

பெயரில்லா சொன்னது…

இன்னும் சம்மரே வரவில்லை,அதற்குள் இப்படியெல்லாம் யோசிக்கறீயே!அதெப்படி?

பெயரில்லா சொன்னது…

கேள்வி கேட்பது சுலபம்...பதில் சொல்வதுதான் கடினம்..சுலபமான வேலையை நீங்கசெஞ்சுட்டீங்க...

அம்னா சொன்னது…

ஏங்க
நீங்க
இப்படியெல்லமா
யோசிப்பீங்க?
எங்களயுமில்ல
யோசிக்க வெச்சிட்டீங்க!
வாழ்த்துக்கள்!!

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்;
கவிதைகளை...

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

நன்றே மகிழ்ந்து வாசித்தேன்... அருமை.

மதுவதனன் மௌ.

படகு சொன்னது…

//ரூம் போட்டு யோசிச்சீங்க‌ளோ?!!!
யோச‌னையை நிறுத்திக்கோங்க‌ ப்ளீஸ்! இல்லைனா அழுதுடுவேன்//
நன்றி இயற்கை. உங்கள் கருத்துரை நகைச்சுவை.

படகு சொன்னது…

//இது வரை அப்படி யோசிக்க வில்லை. ஆனால் இப்ப தோணுதே. அது ஏன்?//
நன்றி சுல்தான் பாய். உங்களை யோசிக்க வைச்சட்டோம்ல.
//அந்த பலகையில் உள்ள படம் நீங்களா போட்டதா? இயற்கையில் அதுவா வந்ததா?//
படம் சுட்டதுதான். கூகிளாண்டதான் கேக்கணும்.

படகு சொன்னது…

//நல்லாதான் யோகிறீங்க பிரதர்....//
நன்றி பிரதர் கவின்

படகு சொன்னது…

வாழ்த்துக்கள்!//
வருகைக்கு நன்றி ராம்சுரேஷ்.
//உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் கூட ஆனந்த இளமை விகடனில்!. நினைக்குந்தோறும் மகிழ்ச்சி.
லிங்க் கொடுத்ததற்கு மீண்டும் நன்றி.

படகு சொன்னது…

//உங்களுக்கு வந்த இந்த சிந்தனை ஏன் எல்லோருக்கும் வரவில்லை?//
நன்றி கணியூர்நஜீ
உங்களுக்கு இந்த சிந்தனை வருவதில்லையா?

படகு சொன்னது…

//Very good thoughts...will try to give answers logically in couple of days....//
நன்றி RAMASUBRAMANIA SHARMA.
ரொம்ப சீரியசாய் யோசனை செய்ய உட்கார்ந்து விட்டீர்களா?.
படிக்க வசதியாக நமக்கு ஒரு லிங்க் கொடுத்திருங்க. Please.

படகு சொன்னது…

//நாங்களும் யோசிச்சிருக்கோம் .......பத்தாவது பாயிண்ட் மட்டும் ..........
நல்ல தான் யோசிக்கிறீங்க நீங்க.........பதில் கிடைச்சா கொஞ்சம் சொல்லுங்க//
நன்றி ஜூலி.
நீங்கள் யோசித்தது கேள்வியையா? பதிலையுமா?
திருவாளர் இராமசுப்ரமணிய சர்மா ஏதாவது பதில் தந்தால் உங்களுக்கும் சொல்கிறேன்.

படகு சொன்னது…

//இன்னும் சம்மரே வரவில்லை,அதற்குள் இப்படியெல்லாம் யோசிக்கறீயே!அதெப்படி?//
நன்றி குயில்.
நாங்க என்னா சம்மர்ல மட்டும் யோசிக்கரவங்களா? உங்கள மாதிரி :))
ஒரு வலைப் பக்கம் திறந்து விடேன்.

படகு சொன்னது…

//கேள்வி கேட்பது சுலபம்...பதில் சொல்வதுதான் கடினம்..சுலபமான வேலையை நீங்கசெஞ்சுட்டீங்க...//
நன்றி முகில்.
நாங்க தருமி மாதிரி. கேள்வி மட்டும்தான். (பதில் தெரியாதுல்ல)
பதிலோட வரேன் என்று திருவாளர் இராமசுப்ரமணிய சர்மா சொல்லி இருக்கிறார்

படகு சொன்னது…

//ஏங்க நீங்க இப்படியெல்லமா யோசிப்பீங்க?
எங்களயுமில்ல யோசிக்க வெச்சிட்டீங்க! வாழ்த்துக்கள்!!//
வாழ்த்துகளுக்கு நன்றி அம்னா.
யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா? நிறைய எழுதுங்கள்.
//இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்; கவிதைகளை...//
இப்பதான் எழுதவே ஆரம்பிக்கிறேன். தங்களின் ஊக்கப்படுத்தலுக்கு நன்றி.

படகு சொன்னது…

//நன்றே மகிழ்ந்து வாசித்தேன்... அருமை.//
நன்றி மதுவதனன் மௌ.

ஜீவா சொன்னது…

உங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துக்கள் (விகடன்)

பெயரில்லா சொன்னது…

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நல்லாவே யோசிச்சிருக்கீங்க ?
இப்ப நாங்களும் இப்படி யோசிக்கும்படி செய்துட்டீங்களே :))

அன்புடன் மலிக்கா சொன்னது…

யோசிச்சி யோசிச்சி
நிறைய சிந்திச்சதில் உதித்தோ இந்தயோசனை, சூப்பர்