புதன், 26 நவம்பர், 2008

எல்லாமிருந்தும்

ஒரே மகள் ரொம்பச் செல்லம்
கண்மணி என்பார் தந்தை
அருமை மகளென்னை செல்லமே
என்றழைத்த வாய் மாறாத தாய்
கோபமிருந்தாலும் அன்பே என்றே
அன்பாய் அழைப்பார் கணவர்
பாப்பா என்ற பாசத்தில் குறை வைப்பதில்லை தமையன்
மாமி என்பாள் மரியாதையாய் குட்டச்சி, என் அண்ணன் மகள்
மச்சி மகளுக்கு நான் சாச்சி
ஆயிரம் பேர் அழைத்த போதும்
எல்லாமிருந்தும் எதுவும் அற்ற வெறுமையாய்
அம்மா என்றழைக்கும் மகவுக்கு
வரம் கேட்டு தவமிருக்கும் நான்

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

இறைவன் வகுத்துள்ள, அவனே அறிந்த சில நியதிகள். இறைவன் உங்களுக்கு மன அமைதியை வழங்கட்டும்.

நாமக்கல் சிபி சொன்னது…

:(

விரைவிலேயே உங்களை அம்மா என்றழைக்க ஒரு ஜீவ்ன் உருவாகும்! அதுவே உம் வயிற்றில் கருவாகும்!

இறைவனிடம் கையேந்துங்கள்! அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை!
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்! அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை!

உங்களுக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன்!

படகு சொன்னது…

//இறைவன் உங்களுக்கு மன அமைதியை வழங்கட்டும்.//
என் பதிவின் முதல் வருகையாளர் நீங்கள்தான் சுல்தான் பாய்.
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சுல்தான் பாய்.

படகு சொன்னது…

//உங்களுக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன்!//
தங்களின் வருகைக்கும் எனக்கான உங்கள் பிரார்த்தனைக்கும் மிகுந்த நன்றி நாமக்கல் சிபி.

பெயரில்லா சொன்னது…

உங்களுக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன்!

படகு சொன்னது…

\\உங்களுக்காக நானும் பிரார்த்தனை செய்கிறேன்\\

தங்களின் வருகைக்கும் எனக்கான உங்கள் பிரார்த்தனைக்கும் மிகுந்த நன்றி

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

மனம் வருந்த வேண்டாம்...இறைஅறிவை மனதில் ஏற்றுங்கள்...நல்ல டாக்டரைப் பாருங்கள்..உங்கள் குறை நீங்கும்...

www.kismath.blogspot.com